பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 145 உணர்ச்சியின் அடிமை; நானே உணர்ச்சியின் அரசி. என்ல்ை உணர்ச்சிபை ஆள முடியும்; உன்னல் உணர்ச்சிக்கு அடிமையாய்த்தான் இருக்க முடியும். போய் வா காந்தா, போய் வா!' என்று கான் எழுந்தேன். மாடிப் படியில் தடதட வென்ற காலடி யோசை கேட்டது. அதைத் தொடர்ந்து, போச்சு, போச்சு. என் மானம் மரியாதை எல்லாமே போச்சு' என்ற அலறலும் கேட்டது. அந்த அலறலுக்குரியவர் ரீமான் லங்கேஸ்வரன் தான் என்பதைத் தெரிந்து கொண்ட காந்தா, என் அறைக்குள் ஒடி ஒளிந்து கொண்டாள்-எதற்கோ? 15ான் கின்ற இடத்திலேயே கின்றேன். அவர் வந்தார். இதோ பார் லலிதா' என்று அத்தானின் அழகுப் பத்திரிகை யொன்றை எடுத்து எனக்கு முன்னுல் வீசி எறிந்தார். என்னையும் பூரீமான் லங்கேஸ்வரனையும் சம்பந்தப்படுத்தி அதில் ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட நான், "என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் அதற்கு?' என்றேன். ஒன்றும் செய்ய வேண்டாம். எனக்கும் உனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று நீ எனக்காக நீதி மன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னல் போதும் -அந்த யோக்கியனின் மேல் மான கஷ்ட வழக்குப் போட்டு ரூபாய் ஐம்பதினுயிரம் வாங்கி விடுவேன்!" என்ருர் அவர். "ஏன், நீங்கள் என்னுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பவில்லையா?"