பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன. 149 அதற்கேற்றற்போல, பார் லலிதா, பார்! அன்பு அலறுகிறது! பார் லலிதா பார்!’ என்று கொக்கரித் துக்கொண்டே என்னை நோக்கி வந்தான் என் அத்தான். 6. எவ்வளவோ கோழையாயிருந்த உ ன க் கு என்லைல்லவோ இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது!’ என்று சொல்லிக் கொண்டே அவன் வீசிய கத்தியை எடுத்து நான் அவனை நோக்கி வீசினேன். குறி தப்பவில்லை; சாய்ந்தான் கீழே! அதற்குமேல் கான் தாமதிக்கவில்லை. ரத்தக்கறை படிந்த கையால் ஒரு கடிதம் எழுதினேன்-அந்தக் கடிதம் இதுதான்: வாழ்கின்ற - வாழப்போகிற ஜீவன்களையெல் லாம் அணைகின்ற-அணையப் போகின்ற ஒரு ஜீவன் அன்போடு வேண்டிக்கொள்வது என்னவென்ருல், உலகத்தின் கன்மைக்காக ஒழுக்கத்தின் வளர்ச்சிக் காக அன்பின் பெருக்குக்காக பண்பின் சிகரத்துக்காக -நீங்கள் அன்புப் பணிபுரிய முன் வரவேண்டாம! ஏனெனில், அன்புக்குப் பிரசாரம் தேவை இல்லை! பார்க்கப்போல்ை அன்பின் எல்லை மிகக் குறுகியது. மிக நுண்ணியது. மற்றதெல்லாம் கட்பு; அதற்கும் எல்லை உண்டு. அந்த எல்லேயை மீறில்ை இன்பமில்லை; துன்பமே! கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள இதயப்பிணைப்பாயிருந்தாலும் சரி, தாய்க்கும் மகனுக் கும் இடையே உள்ள பாசப் பிணைப்பாயிருந்தாலும் சரி-கைம்மாறு கோராமல், கைம்மாறு எதிர்பார்க் காமல் இன்ப துன்பங்களில் பங்கேற்று வாழும் முறை இயற்கையானது; எந்தப் பிரசாரத்தின் விளைவாலும் ஏற்பட்டதல்ல. அ.-10