பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அன்பு அலறுகிறது அது மனித இயல்பு: கியதி ஆம்; அதுதான் அன்பு! கொடிய மிருகங்கள் கூட விளையாடுகின்றன; காதல் புரிகின்றன, பெற்று வளர்த்துப் பேணிக் காக்கின்றன. அவற்றின் கடுவே சென்று அன்புப் பணி செய்தது யார்? கானும் இல்லை; நீங்களும் இல்லை! எனவே கணவனுக்காக மனைவியும்-மனைவிக்காக கணவனும் மக்களுக்காகப் .ெ ப ற் ேரு ரு ம், பெற்ருேருக்காக மக்களும்-எக்த கிலையிலும் தியாக உணர்வோடு, சகிப்புத் தன்மையோடு வாழ்பவர்களை அப்படியே வாழவிடுங்கள். அவர்களுக்கு இடையே சென்று தயவு செய்து அன்புப்பணி செய்யாதீர்கள். தனக்குக் குறை கேர்ந்துவிட்டது என்று உணர்ந்த ஆண் மகன் அந்தக் குறை தனக்கு மட்டும் நேர்ந்த குறையாக ஏன் உணரவேண்டும்? இன்பம், துன்பம் எதிலும், பங்கு பெற வந்தவள் அல்லவா அவன் மனைவி? அவளுக்கும் அந்தக் குறை நேர்ந்துவிட்டதாக உணரக்கூடாதா? உணர்ந்து, அதற்குத் தக்கபடி கடந்து கொள்ளக் கூடாதா? இயற்கையாக, எதிர்பாராது நேர்ந்துவிட்ட ஒரு குறைக்காக நம் கற்பு, கடமை, கண்ணியம், கலாசாரம் ஆகியவற்றையெல்லாம் குறைபடுத்திக் கொள்ள வேண்டுமா? கடைமுறைக்கு இதுவா பரிகாரம்? நாகரிகத்துக்கு இதுவா திறவுகோல்? இல்லை; இல்லவே இல்லை! எந்தத் தத்துவமாயிருந்தாலும் சரி, எந்தச் சித்தாந்தமாயிருந்தாலும் சரி-வாழ்க்கையை அது உருவாக்க வேண்டும்; உருக் குலைக்கக் கூடாது.