பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 அன்பு அலறுகிறது கடிதத்தை எழுதி முடித்ததும் என் கண்ணில் பட்டது விஷம்! ஆம்; என் கணவர் ஒருநாள் ஆஸ்பத்திரியில் அருந்த கினைத்தாரே அது விஷம்தான். அன்று வெறுத்த அதை இன்று விரும்பிக் கையில் எடுத்தேன்; குடித்தேன். "ஐயோ லலிதா, இதெல்லாம் என்ன?’ என்று அலறிக் கொண்டே ஓடிவந்தாள் காந்தா. அவளுடைய அலறலும் அன்பே அலறுவது போல் இருந்தது எனக்கு! கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டுக் கண்களை மூடினேன்; அவ்வளவுதான்; அதற்குப் பின் திறக்கவேயில்லை. 礙 棗 辭 கதையைச் சொல்லி முடித்ததும், :நீங்களாவது எனக்காக என்னைப்போன்ற உங்கள் மனைவிக்காக 6 அன்புப்பணி புரியாமல் இருப்பீர்களா?” என்று சோகமே உருவாய்க கேட்டாள் என் கனவிலே வந்த கட்டழகி.

புரியமாட்டேன் அம்மா, கி ச் ச ய ம் புரிய மாட்டேன்’ என்று கைகூப்பி விடை கொடுத்தேன்.
தோட்டத்தில் படுத்தது போதும்; எழுந்து வாருங்கள் உள்ளே!” என்று என்னைத் தட்டி எழுப்பினுள் மனைவி,

கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு நான் அவ8ளத் தொடர்ந்தேன்.