பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 17 அனுதாபம் கொள்வது கிடையாது-ஏன் கொள்ள வேண்டும்? - வயோதிகரை வெறுத்து வாலிபரைக் கல்யாணம் செய்து கொள்ளும் பெண் மட்டும் தீர்க்க சுமங்கலியாக இருந்து விடுகிருளா, என்ன? எது எப்படியிருந்தபோதிலும் எந்த வித்தியாசமும் பார்க்காத மரணம் ஒரு புதிர் எந்த காட்டு விஞ்ஞானி யாலும் இன்றுவரை விண்டுரைக்க முடியாமல் இருக்கும் விந்தை மிக்க புதிர். அந்தப் புதிருக்கு முன் ல்ை மனிதன் தன்னைப் பகுத்தறிவுள்ளவன் என்று சொல்லிக்கொள்வதற்காகப் பரிதாபப்படாமல் பிறருக்காகப் பரிதாபப்படுவது விந்தையிலும் விந்தை யல்லவா? தேக தத்துவ ரீதியாகப் பார்த்தாலும் சரி, மைேதத்துவ ரீதியாகப் பார்த்தாலும் சரி - இரண்டிலுமே வாலிபரைவிட வயோதிகர் மேல் என்பேன் கான். இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல வில்லை; என்னைச் சுற்றி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர் க9ளயும் ஊடுருவிப் பார்த்தே சொல்லுகிறேன். இந்த நிலையில், மனிதன் மனிதனுக வாழ வேண்டுமானுல் அவனுக்கு அன்பை விட்டால் வேறு கதியுண்டா? இல்லை; இல்லவே இல்லை. அத்தகைய அன்பு-தெய்வீகமான அன்புகேவலம், உடலை ஒட்டி வளர்வதிலும் உடலை ஒட்டித் தேய்வதிலும் ஏதாவது அர்த்தமுண்டா? இல்லை; இல்லவே இல்லை.