பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

19

"அதற்காகப் போலீஸாரை அழைக்கவேண்டாம். இந்தத் திருடிதான் அந்தப் பற்களைத் திருடி வைத்துக் கொண்டிருக்கிறாளாம்' என்னாள் மற்றும் ஒருத்தி.

"அதனாலென்ன, அத்தனை பற்களும் காணாமற் போனாலும் இனிமேல் அவருக்குக் கவலையில்லை; எதை வேண்டுமாலுைம் இடித்துக் கொடுக்கத்தான் இவள் இருக்கிறாளே! என்றாள் அவள்.

"இடித்து மட்டுமா கொடுப்பாள்! மென்றும் கொடுப்பாள்!" என்றாள் இவள்.

இந்தச் சமயத்தில் என் கல்லூரித் தோழியான காந்தா ஓடோடிவந்து, "உங்களுக்குத் தெரியுமோ, இவளுடைய கையைப் பிடித்ததும் தாத்தா தம்முடைய கையிலிருந்த தடியைத் தூக்கித் துார எறிந்து விட்டராம்!" என்றாள், கலகலவென நகைத்துக் கொண்டே.

அவருக்கென்னடி? லலிதாவைக் கல்யாணம் செய்து கொண்டாலும் செய்துகொண்டார்-தடிக்குத் தடியுமச்சு, அமாவாசை விரதம் இருக்க ஆளுமாச்சு!" என்றாள், காந்தாவின் தோழி சாந்தா!

இந்த 'அவலக் குரலைக் கேட்டதும் தாய் தந்தையற்ற எனக்குத் தாயாயிருந்து வந்த என் அத்தையின் கண்களிலே நீர் சுரந்தது; மாமாவோ கலங்கிய கண்களை மேல் துண்டால் மறைத்துக் கொண்டே அப்பால் போய்விட்டார்.

தர்மசங்கடமாக இருந்தது எனக்கு ;போகிறபோக்கில் அத்தையின் கண்களைத் துடைத்துவிட்டுச் சிரிக்க முடியாமல் சிரித்தேன்!