பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அன்பு அலறுகிறது வாழ்க்கை நடத்தும் எபண்பாளரைக் கண்டு வெகுண்டது. அதன் காரணமாசப் பச்சைப் பத்திரிகை யொன்றில் தொடர்பு கொண்டிருந்த அவர், எழுத்தில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் பச்சை' யாகவே இருந்து வந்தார்! பொருளாதார ஏற்றத்தாழ்வில்ை மே ற் ப டி கொடுமைக்கு உள்ளான அவரைப் பண்பில்லாதவர்' என்று சமூகம் தன்னை மறந்து பரிகசித்தது; பகிஷ் கரித்தது- அதுவும் எப்படி?-ஒரு பக்கம் அவருடைய :பத்திரிகை'யை ரகசியமாக ஆதரிப்பதன் மூலம் அவாையும் ரகசியமாக ஆதரித்துக் கொண்டும், இன்ைெரு பக்கம் அவருடைய எழுத்'தைப் பகிரங்க மாக வெறுப்பதன் மூலம் அவரையும் பகிரங்கமாக வெறுத்துக்கொண்டுக்தான் ! இத்தகைய விசித்திரமான சமுகத்தில் விசித்திர மான மனிதராக விளங்கிய அவர், காதலுக்கும் விசித் திரமான பொருள் கொண்டு எந்தப் பெண்களைக் கண்டாலும் காதலித்து வந்தார். அவ்வாறு காதலிக்கப் பட்டவர்களிலே அடியாளும் ஒருத்தி! ம், அவரைப் போய்ச் சொல்கிறேனே, ஆளுய்ப் பிறந்த எவன்தான் என்னைக் காதலிக்கவில்லை? நல்ல வேளையாக யாரோ ஒரு புண்ணியாத்மா அம்மாவென்றும் அக்காவென்றும், மாமியென்றும் மைத்துனியென்றும், தாரமென்றும் தங்கையென்றும், மகளென்றும் மருமகளென்றும் உறவு முறை கொண்டாடிப் பெண்களில் சிலரை ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து காப்பாற்றி வைத்தான். இல்லா விட்டால் எந்தப் பெண்ணைத்தான் காதலிக்காமல் விடுவார்கள் இந்த ஆண்கள்!