பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்பு அலறுகிறது

இவர்களுடைய படிப்பையும் பண்பாட்டையும் மதிப்பிடத் தோன்றும்!

இந்த விஷயத்தில் தங்கள் வீட்டுப் பெண்களை அறவே மறந்துவிடும் இவர்கள், பிறர் வீட்டுப் பெண்களுக்காக எத்தனை பஸ்களை வேண்டுமானாலும் தவற விடுவார்கள்; எத்தனை வகுப்புகள் வேண்டுமானாலும் தவற விடுவார்கள்.

இப்படிப்பட்ட விட புருடர்களையும் விரும்பிச் சில பெண்கள் விரட்டிக்கொண்டு திரிகிறார்களே? கடைசியாகக் கையில் குழந்தையுடனோ, வயிற்றில் குழந்தையுடனோ கண் கலங்கிக் கதியற்று நிற்கிறார்களே? 'பொறுப்பற்ற காதல்' தரும் இந்தப் பரிசுக்குப் 'பொறுப்புமிக்க சமூகம்’ என்ன பரிசு தருகிறது, 'போடி, புத்தி கெட்டவளே!’ என்று அலட்சியப் படுத்துவதைத் தவிர?

காதலை விடக் கடமையையே பெரிதாகக் கருதும் இத்தகைய சமூகத்தை நினைத்துப் பார்க்கத் தெரியாத சமூகம் என்று சொல்லும் நாம் மட்டும் நினைத்துப் பார்க்கத் தெரிந்தவர்களா? சிந்தித்துப் பார்க்கத் தெரிந்த சமூகம் என்று சொல்லும் நாம் மட்டும் சிந்தித்துப் பார்க்கத் தெரிந்தவர்களா? படிப்பும் பண்பும் இல்லாத சமூகம் என்று சொல்லும் நாம் மட்டும் படிப்பும் பண்பும் உள்ளவர்களா? அன்பும் அறிவும் இல்லாத சமூகம் என்று சொல்லும் நாம் மட்டும் அன்பும் அறிவும் உள்ளவர்களா?- 'இல்லை’ என்றுதான் அன்றும் நான் நினைத்தேன்; இன்றும் நான் நினைக்கிறேன். இதன் காரணமாகவே அத்தான் என்னைக் காதலித்தாலும் அவரை நான் காதலிக்க