பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 31 வில்லை; கல்யாணம் செய்து கொள்ளவில்லை. காதலுக்கு கான் கொண்ட பொருள் வேருயிருந்ததால்! ஆம், காலத்தால் உடல் பாதிக்கப்பட்டாலும் உள்ளம் பாதிக்கப்படாத காதலையே நான் விரும்பி னேன். அந்த விருப்பம் என்னைப் பொறுத்தவரை அன்று நிறைவேறி விட்டதென்றே நான் கினைத்தேன். ஆல்ை குறும்பு மிக்க என் தோழிகளின் ஆசை வி. N க ளு க் கு த் தோற்றமளித்ததுபோல் அவர் என்னுடைய அன்பு விழிகளுக்குத் தோற்றமளிக்க வில்லை. அவர்கள் சொன்னது போல் அவருடைய கையில் தடியும் இல்லை; முப்பத்திரண்டு பற்களில் மூன்று பற்கள் காணு மற் போய்விடவும் இல்லை! எது எப்படியிருந்தால்தான் என்ன? என்னுடைய லட்சியத்தை இப்போது நான் அடைந்துவிட்டேன். அந்த லட்சியத்திற்காகச் சிலர் சொல்லுவதுபோல என் உடல் வாடினுலும் உள்ளம் வாடா தன்ருே? பார்க்கப்போல்ை பிறக்கும்போதே நிர்வாணமாகப் பிறக்கும் மனிதனுக்கு ஆடை எது, லட்சியந்தானே? உள்ளத்துக்கு அவசியமாயிருக்கும் அதை உடலுக்கு அவசியமில்லை என்று அவிழ்த்தா எறிந்துவிடுவது? அதற்கு நான் தயாராயில்லை யென்ருலும் எதற்கும் தயாராயிருந்த என் அத்தான் என்னை விரும்பினர். கல்யாணத்துக்கு முன் ல்ை மட்டும் விரும்பவில்லை; பின்னலும் விரும்பினர். கனவில் மட்டும் விரும்பவில்லை; கனவிலும் விரும்பினர். அந்த இழவெடுத்த கனவைக் கல்யாணத்தன்ருவது அவர் காணுமல் இருந்திருக்கக்கூடாதா?- கண்டார்;