விந்தன்
39
அவ்வளவுதான்; முகத்தை மறைத்துக்கொண்டு சென்று அவர் கண்ணாடியின் முன் நின்றார்.
"இந்தப்பக்கம் பாருங்கள்!” என்றாள் காந்தா.
"அந்தப்பக்கம் பாருங்கள்!” என்றாள் சாந்தா.
"இல்லை இல்லை; இந்தப் பக்கம்தான்!” என்றாள் அவள் மீண்டும்.
"இல்லை இல்லை; அந்தப் பக்கம்தான்!” என்றாள் இவள் மீண்டும்.
அவர்கள் சொன்னது சொன்னபடி அவரும் தம் முகத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். எப்படிப் பார்த்தாலும் எந்தப் பக்கம் பார்த்தாலும் அவருடைய முகத்தில் குங்குமமும் இல்லை. மஞ்சளும் இல்லை.
ஏமாற்றத்துடன் திரும்பினார்; மறுபடியும் 'கலகல' வென்ற சிரிப்பொலி அவர்களிடையே எழுந்தது!
அதற்குள் வெந்நீர் போட்டுவிட்ட நான் வெளியே வந்து,"அவர்களுக்கு என்ன வேலை, நீங்கள் போய்க் குளித்துவிட்டு வாருங்கள்!” என்றேன்; அவர் சென்றார்.
"தேவலையே, அதற்குள் மணைவி கிழித்த கோட்டை மாப்பிள்ளை தாண்ட மாட்டேன். என்கிறாரே?"என்றாள் காந்தா.
"எப்படித் தாண்ட முடியும்? நேற்று வரை தானே அவர் இந்த வீட்டுக்கு எஜமானர். இன்று இவள் எஜமானியாகிவிட்டாளே!" என்றாள் காந்தா.