பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 அன்பு அலறுகிறது அட, கடவுளே! அன்புப் பிரச்சாரம் செய்யும் மெய்யன்பர்கள் அந்தப் பாழும் அன்பு இங்கெல்லாம்இங்குள்ள மக்களின் இதயங்களிலெல்லாம், சுடர் விட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யாமல், வேறு எங்கெல்லாமோ-இதயத்தை விட்டு வேறு எங்கெல் லாமோ, சுடர் விட வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிருர்களே? சீசீ, என்னதான் பொழுதைப் போக்க வேண்டு மென்ருலும் அதற்காகப் புத்தியையா போக்கிக் கொள்வது?- வேண்டாம்; வேண்டவே வேண்டாம்? இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் என் கணவர் பக்கம் திரும்பி, எனக்குத் தலையை வலிப்பது போலிருக்கிறது; வீட்டுக்குப் போவோமா?’ என்றேன் f币T6ür。 கரன், சர்க்கஸ் பிடிக்கவில்லையா?” என்ருர் அவர். நான் தயங்கவில்லை; இல்லை' என்று திட்ட வட்டமாகச் சொல்லி வைத்தேன்.

  • அந்த மட்டும் உங்களுக்குப் பிடித்தால் எனக்கும் பிடிக்கும்” என்று சொல்லாமலிருந்தாயே, ரொம்ப சந்தோஷம்!” என்று அவர் கிளம்பினர்.

இருவரும் வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு திரும்பினுேம். இரு புறமும் சரிந்து கின்ற சாலை யொன்றில் எங்கள். கார் வந்து கொண்டிருந்தபோது, எங்களுக் கெதிரே ஒரு லாரி ஜொலிக்கும் தன் செயற்கைக் கண் களால் ஜொலிக்காத எங்கள் இயற்கைக் கண்களைக் குருடாக்கியவிண்ணம் வந்து கொண்டிருந்தது!