பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் a9> அதை எச்சரிப்பதற்காக.எங்கள் காரின் கண்கள் மூடி மூடித் திறந்தன. ஆனல் லாரியின் கண்கள் மூடவும் இல்லை, திறக்கவும் இல்லை-திறந்தது திறந்த படியே இருந்தன. திடீரென்று ஒரு வெடிச் சத்தம் இடிச் சத்தம் போல ஒலித்தது; அதைத் தொடர்ந்து லாரியின் பிடிப்பிலிருந்து விடுபட்ட டயர்’ ஒன்று ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்ட சந்தோஷத்தில் ஆடிப் பாடிக்கொண்டே உருண்டது! அவ்வளவுதான்; நிலைகுலைந்த லாரியைப் போலவே என் கணவரும் கிலே குலைந்தார்! ஒன்றிலிருந்து ஒன்று தப்ப முயன்ற இரண்டு வண்டிகளும் ஒன்றிலிருந்து ஒன்று தப்ப முடியாமல் மோதிச் சாலையின் சரிவிலே உருண்டு புரண்டன!

  • ஐயோ, ஆபத்து!’’- இதைத் தவிர என் ல்ை: அப்போது வேருென்றும் சொல்ல முடியவில்லை.