பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. செவிக்கு எட்டாத சிரிப்பொலி

ன்னத்தைச் சொல்வேன், போங்கள்-கடவுள் பொல்லாதவர்; ரொம்ப ரொம்பப் பொல்லாதவர்.

வயிற்றுப் பசிக்காக ஒருவனை ஒருவன் ஏமாற்றுவதையாவது அவர் மன்னிப்பார்; சதைப் பசிக்காக ஒருவனை ஒருத்தியும், ஒருத்தியை ஒருவனும் ஏமாற்றுவதை அவர் மன்னிக்கவே மாட்டார்.

அதற்காக எவன் எந்த வேடம் தாங்கி நடித்தாலும் சரி, அந்த வேடத்தை அவர் உடனே கலைத்தெறிந்து விடுகிறார். அது மட்டுமல்ல; அதன் காரணமாகத் தன்னைத் தானே ஏமாற்றிக்கெண்டு அவளோ, அவனோ தவிக்கும்போது அவர் சிரிக்கிறார், கைகொட்டிச் சிரிக்கிறார்.

ஆனால் மனிதன் என்ன நினைக்கிறான்? என்ன பேசுகிறான்? தன்னலத்துக்காக அன்பைக் கொல்லும் போதெல்லாம், தான் அதை வளர்ப்பதாக நினைக்கிறான்; வளர்ப்பதாகப் பேசுகிறான். அப்படி நினைக்கும்போதெல்லாம், அப்படிப் பேசும்போதெல்லாம் தன்னைத் தானே ‘அறிஞ’ னாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு, சுண்டலுக்காகத் தாளம் போடும் பஜனை கோஷ்டி போல் தனக்கென்று தாளம் போடத்