பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 அன்பு அலறுகிறது

அதென்னடா, அப்படிப்பட்ட உண்மை?”
  • அதுதான் உன் கணவனுக்கு ஆபரேஷன் கடந்த உண்மையடி, ஆபரேஷன் கடந்த உண்மை!”
  • என்ன ஆபரேஷன், எதற்கு ஆபரேஷன்?’’
அதை ஏன் இப்போது சொல்லவேண்டும்? கசப்பான அந்த உண்மை தெரிந்தபின் இனிப்பான என்னைத் தேடி என்ருவது ஒரு நாள் நீ வருவாய்; அப்போது சொல்கிறேன்!” என்று கறுவிக்கொண்டே அவன் சென்ருன்-ஆமாம், அவன்தான் சென்ருன்அவன் கெட்ட கேட்டுக்கு அவர் என்ன வேண்டிக் கிடக்கிறது, அவர்?’

அன்றிரவு என் கணவருடைய பாத கமலங் களையே, பஞ்சனேயாகக்கொண்டு நான் துரங்காமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எதையோ உருட்டிவிட்டுத் தானும் அதன் மேல் உருண்டு விழும் சத்தம் என் காதில் விழுந்தது. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்; பாத கமலங்களுக்குப் பதிலாகப் பஞ்சணை என் தலைமாட்டில் இருந்தது. பரபரப்புடன் எழுந்து விளக்கைப் போட்டேன்; கணவரைக் காணுேம், சுற்று முற்றும் பார்த்தேன்; தாளிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட்டிருந்தது! இவர் எப்போது மூர்ச்சைத் தெளிந்து எழுந்தார்? இவர் எப்போது கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்ருர்? ஏன் சென்ருர், எதற்காகச் சென்ருர்?