பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அன்பு அலறுகிறது கடவுளுக்குத் தம் கடைசி வணக்கத்தைச் செலுத்து கிருரா? கண்கண்ட தெய்வமாயிருப்பவர், கண் காணுத தெய்வமாகப் போகிருரா? ஏன், ஏன்? அவ்வளவுதான்; கையிலிருந்த குப்பி அவருடைய வாயை கெருங்குவதற்கு முன், ஏன் இந்த முயறசி?’’ என்று கேட்டுக்கொண்டே பா ய் க் து சென்று அவருடைய கையைப் பற்றினேன். விடு என்னை, விட்டுவிடு என்னே!” என்று அவர் இறைந்தார். வாழ்வில் பங்கு கொண்ட எனக்குச் சாவிலும் பங்கு கொடுங்கள்; விட்டுவிடுகிறேன்!” என்றேன நான். அவர் என்னைப் பார்த்தார்; ஒரு முறைக்கு இருமுறை பார்த்தார். உடனே ைக யி லி ரு ந் த குப்பியைக் கீழே விட்டெறிந்து விட்டு வெளியே வந்தார். கேட்க மாட்டேன்! சாவில் நீ பங்கு கேட்டாலும் கான் பங்கு கேட்கமாட்டேன். வாழ்வில் வேண்டுமானல் பங்கு கேட்பேன்: வாழ்வில் வேண்டுமானுல் உன்னிடம் நான் பங்கு கேட்பேன்!” என்ருர். நான் அவரைப் பார்த்தேன்; ஒரு முறைக்கு இருமுறை பார்த்தேன். கேட்கவில்லையா உனக்குக் கேட்கவில்லையா?” என்று அவர் எதையோ உற்றுக் கேட்பவர் போல் என்னைக் கேட்டார்.