பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பு அலறுகிறதுகனவில் மலர்ந்த கதை

இரவில் சாப்பிட்ட பிறகு, ஏதாவது ஒரு நாவலை எடுத்து நான் துரக்கம் வரும் வரை படித்துக்கொண்டிருப்பது வழக்கம். அந்த வழக்கத்தையொட்டி அன்றும் ஒரு நாவலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். ஒரே புழுக்கமாயிருந்தது;தோட்டத்துக்கு வந்தேன். வேனிற்காலத்து வெண்ணிலவு தண்ணொளிக் கரங்களை நீட்டி என்னை வரவேற்றது; 'இதோ வந்துவிட்டேன்' என்று மடக்குங் கட்டிலைத் தூக்கிப் பிரித்துப் போட்டு அங்கேயே படுத்தேன். தென்றல் தாலாட்ட, பூங்கொடிகள் மலர்க் கொத்தால் வெண்சாமரம் வீச, சம்பளம் இல்லாத சேவையைத் தன்னலம் மிக்க ஒரு முதலாளி எவ்வளவு சந்தோஷத்துடன் அனுபவிப்பானோ, அவ்வளவு சந்தோஷத்துடன் அவற்றின் சேவையை