பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 75 களைக் கைகளால் பொத்திக்கொண்டு அவர் கதறி அழுதார். என் அழுகிறீர்கள், எதற்காக அழுகிறீர்கள்?’’ என்று கான் துடிதுடித்துக் கேட்டேன். கேட்காதே, அதை மட்டும் என்னிடம் கேட் காதே! நான் செய்த பாவத்துக்காக கான் அழத்தான் வேண்டும்; என் ஆயுள் உள்ளவரை கான் அழத்தான் வேண்டும்!” என்ருர் அவர் படபடப்புடன். கநீங்கள் அழும்போது நான் மட்டும் சிரித்துக் கொண்டா இருக்கப் போகிறேன்? விஷயத்தைச் சொல் லுங்கள், அதற்காக அழத்தான் வேண்டுமென்ருல் கானும் உங்களுடன் சேர்ந்து அழுகிறேன்.” கூைடாது, ஒரு பாவமும் செய்யாத நீ என்னுடன் சேர்ந்து அழக்கூடாது. சிரிக்கவேண்டும லலிதா, கான் அழுதால் நீ சிரிக்கவேண்டும். அப்பொழுது தான் தன்னலத்துக்காக அன்பைக் கொன்றுவிட்டு, *உலகம் வாழ்வதற்காக கான் அதை வளர்க்கிறேன்!” என்று சொல்லிக்கொள்ளும் என்னைப்போன்ற மாந்தர் களுக்குப் புத்தி வரும் லலிதா, புத்தி வரும்!” கசரி, சிரிக்கிறேன். விஷயத்தைச் சொல்லுங்கள்?" கமுடியாது. உன்னிடம் அதைச் சொன்னபின் என்னுல் உயிர் வாழ முடியாது!’

அப்படியானல் சொல்ல வேண்டாம்; படுத்துக் கொள்ளுங்கள்” என்று அவரைக் கட்டிலின் மேல் படுக்கவைத்து விட்டு, எழுந்து சென்று விளக்கை அனைத்துவிட்டு, நானும் தரையில் முந்தானையை விரித்துப் படுத்தேன்.