பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 அன்பு அலறுகிறது: கள்ளிரவு: மணி பன்னிரண்டு அடித்து ஒய்ந்தது. தமக்குத் துரக்கம் வராதபோது எனக்கு மட்டும் துாக்கம் வந்துவிடும் என்று அவர் எப்படித்தான் கினைத்தாரோ, எழுந்து விளக்கைப் போட்டார்; என்னைப் பார்த்தார். கனைத்தார்; ஒரு முறைக்கு இரு முறையாகக் கனைத்தார். அசைந்து கொடுக்கவில்லை; கொஞ்சங் கூட கான் அசைக்து கொடுக்கவில்லை. போட்ட விளக்கை அணைத்தார்; புறப்பட்டார். எங்கே, எங்கே, எங்கே? கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, கேட்காமலே தெரிந்து கொள்வதுதான் மேல் என்று எண்ணிய கான், அவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்க் தேன். அடிமேல் அடிவைத்துத் தொடர்கதேன். திரும்பினுல் ஒளிந்தேன்; திரும்பாவிட்டால் நடந்தேன். கற்களும் முட்களும், என்ன விஷயம், எங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் இந்த கேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?’ என்று தங்கள் கைவரிசைகளை எங்கள் கால்களில் காட்டி எங்களை விசாரித்தன. உள்ளத்தில் பொத்துக்கொண்டவிட்ட கற்களே யும் முட்களையும் உங்களைப் பிடுங்கி எறிவது போல் பிடுங்கி எறிவதற்காக!' என்று அவற்றைப் பிடுங்கி எறிந்து கொண்டே காங்கள் சென்ருேம். எங்களுக்குத்தான் விரோதிகள் இருக்கிருர்கள். அவர்களுக்குப் பயந்து காங்கள் இரவில் வெளியே வருகிருேம். உங்களுக்கு யார் விரோதிகள், நீங்கள் யாருக்குப் பயந்து இரவில் வெளியே வருகிறீர்கள்?’ என்று கேட்பதுபோல் ஆந்தைகளும் வெளவால் களும் எங்களைக் கண்டதும் அலறின.