பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் ገገr ஏனே தெரியவில்லை, இப்போது எங்களுக்கு காங்களே விரோதிகளாகிவிட்டோம். அதனுல்தான் ஒருவரையொருவர் அறியாமல் இரவில் செல்கிருேம்’ என்று சொல்லக்கூட வெட்கப்படுபவர்கள்போல் அவற்றை ஏறெடுத்துப் பார்க்காமல் காங்கள் சென்ருேம். கோயில்; ஊருக்கு நடுவே இல்லாமல் கொஞ்சம் ஒதுங்கியிருந்த கோயில். பக்தர்களைக் கவனிக்காமல் பகவான் எங்கே :துரங்கிவிடப் போகிருரோ என்று பயந்தவர்களாய் வீடு வாசலற்ற அடியார்கள் பலர் அங்கே பலத்த குறட்டை விட்டுப் பகவானைத் துரங்க விடாமல் தாங்கள் மட்டும் துரங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் கோயிலின் வாசலை அடைந்ததுதான் தாமதம், கேடவுளே, வழி காட்டு! கடவுளே, வழி காட்டு!” என்று கதறிக்கொண்டே என் கணவர் கர்ப்பக்கிரகத் தின் படிகளின் மேல் தலையை வைத்து அழுதார். புரண்டார், எழுந்தார். அட கடவுளே, இங்கேயும் புதிர்தான? ஏன் வழி காட்டவேண்டும்? எதற்கு வழி காட்டவேண்டும்? உனக்குத் தான் யாரும் சொல்ல வேண்டிய தில்லை; எனக்குமா யாரும் சொல்லவேண்டியதில்லை? கல்ல வே8ள, எதிலும் சந்தேகம் தட்டும் என் கணவருக்கு எல்லாம் வல்ல இறைவன் விஷயத்திலும் கொஞ்சம் சந்தேகம் தட்டிற்ருே என்னவோ, சொல்ல ஆரம்பித்தார். சொல்வதைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே, ரகசியமாகச் சொல்ல ஆரம்பித்தார்: கடவுளே, வழி காட்டு! அன்பைக் கொன்றதற் காக ஆணவத்தைக் கொன்றுவிட். கடவுளே வழி