பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
அன்பு அலறுகிறது
 

அனுபவித்தபடி நாவலைப் பிரித்தேன்; கண்ணுங் க ரு த் து ம் அதன் பககங்களை ஒவவொன்றாகப் புரட்டுவதிலே கலந்தன.

அதற்குப் பின் எப்பொழுது தூங்கினேனோ, அது எனக்குத் தெரியாது.

ஒரு கனவு; அந்தக் கனவிலே கட்டழகி ஒருத்தி கனிவே உருவாய் வந்து நின்றாள்.

"யார் அம்மா, நீங்கள்?"

விரக்தியுடன் அவள் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"உண்மையாகவே என்னை நீங்கள் உங்களுடைய அம்மாவாக நினைக்கிறீர்களா?”

"ஆமாம். இந்த உலகத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் நான் என்னுடைய அம்மாவாகத் தான் நினைக்கிறேன்; அதுதான் எங்கள் தமிழ்நாட்டின் பண்புங் கூட!"

"நினைப்பது சரி; அதன்படி நடக்கிறீர்களா?”

"நடக்கிறேன் அம்மா, நடக்கிறேன்!”

உங்களுக்குத் தெரிந்த பெண் ஒருத்தி, உங்களுக்குச் சரிசமானமான வயதுடையவளாக இருந்தால்?"

"அதனாலென்ன, வழிவழியாக வந்துகொண்டிருக்கும் பெண் குலமே தாய்மைக் குலந்தான், எங்களுக்கு!"