பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 83 அதை அணைக்க முடியாமல் கான் தவியாய்த் தவிப்பேன்; தலைவலி' என்று சொல்லிவிட்டுப் போய்த் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசித்து விசித்து அழுவேன்; அழுத கண்ணிரால் என் உள்ளம் கக்கும அனலை ஓரளவாவது அணைக்கப் பார்ப்பேன்! இதை அறியாமல் என்னை இன்ைெருவனிடம் ஒப்படைக்க என் கணவர் முயலும்போதெல்லாம், ஐேயோ இதென்ன சோதனை' என்று எனக்குத் தோன்றும். இந்தச் சோதனையிலிருந்தும், சோதனை பால் அடைந்த வேதனையிலிருந்தும் தப்ப ஒரு துளி விஷத்தின் உதவியையாவது, ஒரு முழங் கயிற்றின் உதவியையாவது காடில்ை என்ன என்றுகூடச் சில சமயம் தோன்றும். அவற்றை காடினுல், கடைமுறை வாழ்க்கையில் கான் அடைய வேண்டிய வெற்றியை அவையல்லவா அடைந்துவிடும்?’ என்று எண்ணித் தோல்விக்கு இடங் கொடாமல் என்னையும் என் லட்சியத்தையும் காத்துக்கொள்ள முயல்வேன். ஆம்! எனக்கு லட்சியம் என்று ஒன்று இருந்தது; அந்த லட்சியத்துக்காக எதையும் எதிர்த்து கிற்கும் சக்தியும் எனக்கு இருந்தது. பெண்ணே சக்தியின் வடிவமல்லவா? அன்று ஏதோ ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டுமென்பதற்காகக் காந்தா என் கணவரை அழைத்துக் கொண்டு போயிருந்தாள். போனவர் திரும்பி வரும்போது வழக்கம்போல் ஒரு பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.