விந்தன் 87 வும் என்னுடன் இருந்திருப்பார்கள்; அவர்களையும் அவர்களுடைய உபத்திரவத்தையும் எப்படிச் சமாளித் திருக்க வேண்டுமோ, அப்படிச் சமாளித்திருப்பார்கள். இப்பொழுதிருக்குமிடத்திலோ என்னையும் சமையற் காரன் சாம்புவையும் தவிர வேறு யாருமில்லை. எனவே, இருவரில் ஒருவர் வாய்ச் சண்டையை விட்டுக் கைப் பிரயோகத்தாலோ கால் பிரயோகத்தாலோ தப்பினேன், பிழைத்தேன்' என்று தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே ஒடும்வரை, அவர்களுடைய சண்டையை;கான்,வேடிக்கைப் பார்ப்பது என்னுடைய தலைவிதியாயிற்று! ஒருவர், அன்பே உலகில் என்னை நம்பித்தான் உயிர் வாழ்கிறது' என்று மார் தட்டுவார்; இல்லை; இல்லவே யில்லை, அது என்னை கம்பித்தான் உயிர் வாழ்கிறது!’ என்று தோள் தட்டுவார். இதோ பார், இவள் எனக்குத்தான் சொந்தம் என்பதற்கு இந்தக் கடிதமே அத்தாட்சி!” என்று என் கணவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதத்தை எடுத்துக் காட்டுவார் ஒருவர்; இதோ பார், இவன் எனக்குத்தான் சொந்தம் என்பதற்கு என் ரத்தமே அத்தாட்சி!’ என்று ககத்தால் தோலைக் கீறி ரத்தத்தை எடுத்துத் தொட்டுக் காட்டுவார் இன்ைெருவர். இந்தக் கோரக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் நான் கண்ணை மூடிக் கொள்வேன். கடைசியாக வாய்ச் சண்டை கிற்கும்; எதிர்பார்த்ததற்கு மேலாகவே கையும் காலும் சேர்க் தாற் போல பிரயோகமாகும். விட்டேன, பார்! விட்டேன பார்!’ என்று பரஸ்பரம் கருவிக்கொண்டே ஒருவரையொருவர் விரட்ட, இருவரும் தெருவில் இறங்கி ஒடும் சத்தம் என் காதில் விழும்; அப்பாடா!' எனற ஆறுதலுடன் தெருக் கதவைச் சாத்தித்
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/89
Appearance