பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 அன்பு அலறுகிறது தெரியாமல் சொல்லவில்லை!" என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். அவரது பேச்சைக் கேட்க எனக்குச் சாம்புவின் மேல் கோபம் கோபமாக வந்தது-காஆலயில் திறந்து விட்ட புழக்கடைக் கதவை மறுபடியும் சாத்தித் தொலைக்க மறந்து விட்டான் போலிருக்கிறது! அவனுக்கென்ன, அதன் பலனை இப்பொழுது கானல்லவா அனுபவிக்க வேண்டியிருக்கிறது? இந்த எண்ணத்தில் தன்னை மறந்துவிட்ட என்னை நோக்கி, என்ன லலிதா, என்னைக் கண்டதும் யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே?’ என்ருர் என் அத்தான், வெய்யிலில் வைத்த வெண்ணெயைப் போல! ஒன்றுமில்லை. பெண்களால் அழகு தவழும் சிலருடைய முகத்தில் அசடு தவழுகிறது; அசடு தவழும் சிலருடைய முகத்தில் அழகு தவழுகிறது இவர்களில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களா யிருக்கிறீர்களே நீங்கள் என்று யோசித்தேன்!” என்று நான் ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான்; வந்தது மோசம். அப்படியா லலிதா? நான் உனக்கு அழகாயிருக்கிறேன, கான் உனக்கு அழகாயிருக்கிறேனு?’ என்று கொஞ்சிக் கேட்டுக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி அவர் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கெருங்கினர். அைட பாவமே, மறுபடியும் அந்த அசட்டுத்தனம் வந்து தொலைந்துவிட்டதே' என்று கான் எழுந்து கின்றேன்.