92 அன்பு அலறுகிறது 6இல்லை லலிதா இல்லை; அவசரப்படவில்லை' என்று அவரும் கொஞ்சம் பின் வாங்கினர். சரி, வாருங்கள்!' என்று பந்தையும் மட்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்; அவரும் என்னுடன் கிளம்பினர். இருவரும் தோட்டத்துக்கு வந்தோம்;ஏற்கெனவே அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த வலையை அடுத்தடுத்து நின்று, ஆட்டத்தை ஆரம்பித்தோம். எதிர்பார்த்தபடியே என்னல் அடிக்கப்பட்ட பந்து ஆவரிடமிருந்து தப்பிப் புழக்கடை மதிற் சுவரைத் தாண்டிச் சென்றது; அந்தப் பந்தைப் போலவே அவரும் ஒரே பாய்ச்சலில் புழக்கடைக் கதவைத் தாண்டிச் சென் ருர் - பந்தை எடுத்துக்கொண்டு வரத்தான்! அந்தச் சந்தர்ப்பத்தை நான் கழுவ விடவில்லை; கதவை இழுத்துச் சாத்தி ஒரு தாளுக்கு இரு தாள் களாகப் போட்டுவிட்டு உள்ளே வந்தேன்-என்ன ஆச்சரியம் "நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணிடைப் பெண் ஒருத்தி பணியிலே!" என்று பாடிக்கொண்டே பூரீமான் லங்கேஸ்வரன் வாயில் கவ்விய சீப்புடன் என் க்கு எதிர்த்தாற்போல் மாடியிலிருந்து குதித்தார்.
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/94
Appearance