பக்கம்:அன்பு மாலை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
சிற்றுரை

 எனக்குப் பின்னால் வேதாந்த சித்தாந்த வல்லுநரும் மிகச் சிறந்த கல்வியாளரும் இப்பொழுது மாயோகியினுடைய பிரசாரகராக இருக்கின்ற வருமாகிய நம்முடைய பெரிய அண்ணா தெ.பொ. மீனட்சி சுந்தரம் அவர்கள் வந்திருக்கிறார்கள். இந்தச் சின்ன மலரை அவர்களுடைய கையினாலே வெளியிட்டு அருளுவார்கள். நான் மீனாட்சிசுந்தரம் என்னும் பெரியோருக்கு மனத்தில் மரியாதை வைக்கிறவன். என்னுடைய ஆசிரியருக்கும் ஆசிரியர் மகா வித்து வான் மீட்ைசி சுந்தரம் பிள்ளையவர்கள். அவருடைய திருநாமத்தைத் தரித்த அவர்கள் என்னுடைய சிறிய நூலே வெளியிடுகிறார்கள் என்றால் அது நல்ல பேறு என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இந்த நூலை வெளியிட்டுச் சில வார்த்தைகள் சொல்லும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து சில பெருமக்கள் பேசுவார்கள். இறைவனுடைய திருவருளினலே, சுவாமிகளுடைய ஆசியினாலே, எல்லோருடைய உள்ளமும் நிறைவு பெறும்படியாகப் பிரார்த்திக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/11&oldid=1001888" இருந்து மீள்விக்கப்பட்டது