பக்கம்:அன்பு மாலை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சி. ற் று ைர - 2

ஒ"இர் அருள் உருவாய் எழுந்தருளியிருக்கும் சுவாமிகளுடைய திருப்பாத கமலங்களுக்கு என் னுடைய வணக்கத்தை முதலில் சமர்ப்பித்துக் கொள் கிறேன். தாய்மார்களுக்கும் அன்பர்களுக்கும் என் னுடைய வணக்கங்கள். இங்கே வந்து சில நேரம் நல்ல பொழுதாகப் போக்க வேண்டும் என்ற எண் ணத்தால் இதற்கு முன் சில பாடல்கள் பாடினேன். பாட்டு மாத்திரம் இருந்தால் போதுமா? உரையும் வேண்டுமென்று நினைத்தேன். இட்டிலியைக் கொடுத் தால் மேலே சட்டினியைப் போடுவது போலப் பாட் டுக்கப்புறம் இந்த உரையும் இருக்கலாமென்று நினைத் தேன். -

எதைப் பற்றிப் பேசுவது என்ற எண்ணம் எனக் குத் தோன்றுகிறது. எதைப் பற்றிப் பேசினல் பேச்சு இல்லாமல் போகுமோ அதைப் பற்றிப் பேசலாமென்று நினைக்கிறேன். முள்ளிளுல் முள்ளேப் போக்குவது போல, வைரத்தினுல் வைரத்தை அறுப்பது போல, விஷத்தினுல் விஷத்தை மாற்றுவது போல, பேச்சிளுல் பேச்சை மாற்றி விடலாமென்று பெரியவர்கள் சொல் லுவார்கள். பேச்சுக்கும் மெளனத்திற்கும் நேர் பகை யாயிற்றே எப்படிப் பேச்சில்ை பேச்சை மாற்றலாம்?" என்ற சந்தேகம் வரும். ஒரு முள் காவில் தைத்தால் மற்ருெரு முள்ளே எடுத்து மெள்ள மெள்ள அந்த முள்ளே எடுப்பது வழக்கம். நாம் பேசுகிற பேச்சில் மேலும் மேலும் ஆசையைப் பெருக்கி அவலத்தை உண்டாக்கி மனத்தில் சுழற்சி ஏற்படுத்து கின்றது ஒருவகை. அப்படியல்லாமல் மனத்துக்கு அமைதியைத் தந்து. மனத்திலுள்ள ஐயப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/12&oldid=535533" இருந்து மீள்விக்கப்பட்டது