பக்கம்:அன்பு மாலை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிற்றுரை 7

களையெல்லாம் தெளிவித்து, மனம் அடங்கும் திறத் திலே அமைகின்ற பேச்சு ஒன்று.

ஒர் உதாரணம் சொல்லலாம். கட்டப்படாத பொல் லாத மாடு ஒன்று தன் கால் போன போக்கிலே போகும்பொழுது அதை யாரும் நிறுத்த முடியாது. யாராவது ஒரு கயிற்றில் முளை அடித்துக் கட்டினல் அந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும். அதனுடைய போக்கெல்லாம் தட்டுத் தடுமாறி ஒரு முறை இல் லா ம ல் இரு க்கு ம். அ. த னு ைடய நடையிலே பல பயிர்கள் அழியும். பல பேர் அஞ்சுவார்கள். ஆனால் அதே மாட்டைக் கொண்டு வந்து இருநூறு அடி நீளமுள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனுடைய தலைப்பை ஒரு முளையிலே கட்டி விட் டால், அந்த மாட்டுக்குத் தன்னேக் கட்டிப் போட்டி ருப்பது தெரியாது. நீளம் மிக அதிகமாக இருப்பதால் அது தெரியாது. வழக்கம் போல், அது திரியத் தொடங்கும். ஆனல் அப்படித் திரியும்பொழுது வட்ட மாகத் திரியுமே ஒழியச் சிதறுண்ட நெறியில் செல்லாது. இருநூறு அடி நீளத்தில் சுற்றி வட்டமிடும். ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் ஓர் அங்குலம் கயிற்றில் குறையும். அப்படியே அது வேகமாகச் சுற்றச் சுற்றக் கயிற்றினுடைய நீளம் குறைந்து போகும். பிறகு மிகச் சமீபத்தில் வந்து முளை வேறு, கயிறு வேறு, மாடு வேறு என்றில்லாமல் அப்படியே நின்று விடும். . -

அதுபோல, நாம் பேசுகிற பேச்சை அடக்காமல், இறைவன் என்ற முளையை வைத்து அவளுேடு சம் பந்தப்பட்ட நீளமான பேச்சையே பேசிக் கொண்டிருந் தால், நாளடைவில் அது மிக மிகக் குறுகி, பிறகு பேச் சில்லாத நிலையை அடையலாம். முளையில்லாத மாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/13&oldid=535534" இருந்து மீள்விக்கப்பட்டது