பக்கம்:அன்பு மாலை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிற்றுரை §

வேகமாகப் போகிற குழந்தையைத் தடுக்க முடி யாது. வேறு திசையைக் காட்டினல் ஒடும். கையிலே கத்தி வைத்திருக்கிற குழந்தையின் கையிலிருந்து அதைப் பிடுங்கினல் நம்முடைய கையும் காயமாகும்; அந்தக் குழந்தையினுடைய கையும் காயமாகும். அதற்குப் பதில்ாக, ஒரு பொம்மையைக் கொடுத்தால் கத்தியைப் போட்டுவிட்டுப் பொம்மையைப் பிடித்துக் கொள்ளும்.

அதுபோல், உலகியல் பேச்சிலே ஈடுபட்டு உலகியல் , *

பாட்டைக் கேட்கின்ற மனத்துக்கு இறைவனுடைய சம்பந்தமான பேச்சையும் பாட்டையும் கொடுத்தால், அந்தக் குழந்தை கத்தியை விட்டுவிட்டுப் பொம்மையை எடுத்துக் கொள்வது போல, இவற்றிலே ஈடுபடும். ஏனென்ருல், பாட்டு நெஞ்சை உருக்குவது. பாட்டு எப்படி இருந்தாலும் கேட்கிற ஆசை உண்டாகும். இறைவனுடைய பாட்டாக இருப்பதல்ை, அந்த ஆசையானது நிறைவேறுவதோடு இறைவனுடைய புகழும் நெஞ்சில் பதியும். இதற்காகத்தான் இந்த நாட்டிலே கோயில் என்றும் குளம் என்றும் கடவுளு டைய விக்கிரகங்கள் என்றும் பூஜையென்றும் திருவிழர் வென்றும் வைத்திருக்கிருர்கள். மனிதனுடைய வாழ்க் கையிலே கரசரணுதி அவயவங்களின் செயல்களும் அவனுட்ைய எண்ணங்களும் பேச்சும் இறைவனுடைய சம்பந்தமாக இருந்தால் மெல்ல மெல்ல அவை குறுகிப்போய்க் கடைசியில் மெளன நிலை வரும் என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிருர்கள்.

இதையே சங்கராசாரியார் சொல்லுகிறர். சகுண்ப் பிரம்மத்தை உபாசன பண்ணில்ை நிர்க்குணப் பிரம்

மத்தை அடையலாம் என்று சொல்கிருர், சாது சங்கத்தில் இருந்தால் சங்கமில்லாத நிலை வரும். ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம். ஸத்ஸங்கமும் நிஸ்

ஸங்கமும் நேர்விரோதமாகத் தோன்றும். பேச்சும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/15&oldid=535536" இருந்து மீள்விக்கப்பட்டது