பக்கம்:அன்பு மாலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

13

ஏண்பெறவே காட்டுவார்; யாவையுமே பொய்யாம்;
இவை தம்மில் உண்மையில்லை; நம்பிக்கை வேண்டாம்;
சாண்பெரிய கும்பிக்கே உழல்கின்ற மாந்தர்
தமைக்கண்டார் என்கிடைக்கும் பயன்ஏதும் உண்டோ?

ஏண் - பெருமை. சாண் பெரிய கும்பிக்கே
- சாணளவுள்ள வயிற்றுக்கே.

உண்டுண்டு நாள்நாளும் கும்பிக்கே வாழ்வை
உறக்கழித்து விளையாடி மிகப்பேசித் திரிந்து
கொண்டஇந்தப் பிறவியிலே பெரும்பேற்றைக் காணாக்
குறையுடைய மாந்தர்தாம் என்செய்வார்? நாளை
விண்டுடையக் காலன்வரின் நடுநடுங்கிச் சோர்வார்:
வேதமறிந் தார்க்குமப்போ துய்திபெறல் உண்டோ?.
திண்டிறலார் அருணையினில் ராமசுரத் குமாரின்
திருவடியைச் சேர்மின்கள்; பரிகாரம் உண்டே. 7

உறக்கழித்து - மிகுதியாக வீணாக்கி.
விண்டு உடைய - நம் உயிர் உடம்பினின்றும் பிரிய.

பரிகாரம் பலநோய்க்குச் சொல்வார்கள்; தம்பால்
படைக்கின்ற நோய்க்குரிய மருத்துவத்தைக் காணார்:
அரிதாரம் பூசுகின்ற நடிகர்போல் பிறர்க்கே
அருநெறியைக் காட்டுவார்; அவர்சிறிதும் உய்யார்:
பெரிதான வழிசொல்வார் போலஅமர்ந் திருப்பார்:
பேதையர்கள் தம்மையே மாற்றியே பறிப்பார்:
உரிதான பொருள் இதுவென் றொண்ணாமல் அருணை
உறும்ராம சுரத்குமார் தம்பாலே சேர்மின். 8

சேர்க்கின்ற பொருள் எல்லாம் நித்தியமாய் இருக்கும்,
சிறப்புடைய கல்வியெல்லாம் பெரும்புகழைத்தருமால்,
ஈர்க்கின்ற உடலழகை எந்நாளும் பெறுவோம்,
என்கின்ற மயக்கமெலாம் விட்டுவிடு வீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/19&oldid=1303376" இலிருந்து மீள்விக்கப்பட்டது