பக்கம்:அன்பு மாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அன்பு மாலை

பார்க்கின்ற பொருளெல்லாம் கண்முன்னே சாகப்
பாரினிலே நித்தியமாம் பொருள்ஒன்றும் உண்டோ?
சீர்க்குன்றாக் குணமுடையான், ராமசுரத் குமார்பால்
சென்றிடுவீர்; நித்தியமாம் வாழ்வினையே காண்பீர். 9

ஈர்க்கின்ற - மனத்தைக் கவர்கின்ற.

பாம்புசிறி தானாலும் பெரியகம்பு கொண்டே
பதைபதைத் தேஅடிப்பதற்கோர் வழிதெரியவேண்டும்.
நாம்பெரியம் என்றிறுமாந் துலகினிலே திரிந்து
நாளையமன் வருங்கால்மிக் கச்சமுற நிற்பீர்,
தூம்புடைய கழைமுரலும் கண்ணனென நின்று
துரியநிலை காண்கின்ற சிவமெனவே ஓங்கும்
ஏம்பலுறு ராமசுரத் குமார்தன்பால் வருவீர்;
இன்பநெறி இதுவென்றே கண்டிடற்கும் ஆமே. 10.

தூம்பு - துளை, கழை - புல்லாங்குழல், ஏம்பல் - இன்பம்.

ஆமென்பார் சிலகாலை;அன்றென்பார் சிலகால்:
அறிவென்பார் சிலகாலை;அன்பென்பார் சிலகால்;
ஓமென்பார்; அதற்குள்ளே உறும்பொருளாம் என்பார்;
ஒருசொல்லும் இல்லாத மோனநிலை என்பார்:
தாமென்பார்; தம்மின்றிப் பிறிதென்றே சொல்வார்:
தயையுடனே ஒன்றென்றே சொல்லுதற்கோர் ஞானி
ஏமம்சார் ராமசுரத் குமாராகி நின்றான்:
இவன்பாலே அருணையினில் வந்தடைந்தால் உய்வாம். 11

ஏமம் - பாதுகாப்பு.

உய்யுநெறி காட்டுதற்கே நான்மறைகள் உண்டாம்;
உலகினிலே பலபெரியோர் அவதரித்தே வந்தார்:
பெய்யுமழை போலஅவர் உபதேசம் சொன்னார்:
பிறங்குமவை மலைபோலக் குவிந்திருக்கு மாலோ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/20&oldid=1303196" இலிருந்து மீள்விக்கப்பட்டது