பக்கம்:அன்பு மாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அன்பு மாலை



ஏர்பரவும் அருளடைய அவர்க்குநெறி உண்டோ?
இன்னலெலாம் போக்கியுறு ஞானமெய்த வேண்டின்
ஆர்பெரியர் என்றாராய்ந்தே அதற்காக ஏங்கி
அலையாமல் ராமசுரத் குமார்தன்னை அடைமின்.15

வார் - கச்ச, துயர் உழந்து - துயரத்தால் வருந்தி, இன்னல் - துன்பம்.

மின்னலெனும் வாழ்வினையே மெய்யென்று நம்பி
விளங்கிழையார் மயலொன்றே பெருஞ்சுகமாய் எண்ணிக்
கன்னலுறு வில்லெடுத்த மதனுடைய போரில்
கருத்தழிந்து காமமெனும் சுறவின்வாய்ப் பட்டே,
இன்னல்மிக அடைவதனால் உலகத்தில் என்றும்
இடையூறாம்; ஆதலினால் ஒன்றுசொல்வேன் கேண்மின்:
பன்னுமுரை தனில்தாய்போல் அன்புநிறைந் திருக்கும்,
பகவந்தன், ராமசுரத் குமார்பாலே அடைமின். 16

விளங்கு இழையார் -பிரகாசிக்கின்ற நகைகளை அணிந்த பெண்கள். கன்னல் - கரும்பு, மதன் - காமன்.

பாலென்றும் தேனென்றும் பழமென்றும் பேசிப்
பரிவுடைய மாதர்தம் மயலினிலே உழன்று
சீலமெலாம் அறப்போக்கி அமைதியினை இழந்து
திரிகின்ற மாந்தர்காள், சாந்தமுற வழிதான்
கோலுகின்ற அருணையினில் தயையாரும் குன்றாய்க்
குருவாகி உருவாகி ராமசுரத்கு மாராம்
சாலஉறு தனிப்பேரைப் படைத்துநிற் கின்ற
சாமிஅருள் அடைவீரேல் துக்கமெலாம் போகும். 17

கும்மிருட்டுத் தனில்ஒளிபோல் கோற்கணையின் முன்னே
குறுகுகின்ற மெத்தைபோல் பனிப்படைக்கு முன்னே
பம்மிவரு கதிரோன்போல் மாயையெனும் இருட்டைப்
பறிஞானம் போல்எமக்குப் பிறவியினைப் போக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/22&oldid=1303525" இலிருந்து மீள்விக்கப்பட்டது