பக்கம்:அன்பு மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

21

கல்லலுற் றிடும்நெஞ் சத்துக்
கசடெலாம் போக்கும் வீரன்;
தொல்லையை நீக்கும் ராம -
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

30

கல்லல் - உள்ளே தோண்டுவதேபோலத் துன்பத்தால் குமுறுதல்,கசடு - குற்றம்.


மகந்தரும் பயன்க ளெல்லாம்
வந்திடல் போல, ஞான
முகந்தரும் கருணை தன்னால்
மூண்டிடும் நலங்கள் தந்தே
அகந்தரும் அன்பு காட்டி
அருள் மழை பொழியும் ஐயன்,
சுகந்தரும் ஞானி ராம
சுரத்குமார் பாதம் போற்றி!

31

மகம் - வேள்வி.


அரியவாம் என்று சொல்லி
அடர்சித்துப் பலவும் காட்டிப்
பெரியவர் என்று ஞாலம்
பேசிட வைப்பார் பல்லோர்;
மரிவுறு காலை அன்னோர்
மறலிபால் அஞ்சி நிற்பார்;
துரிசறு சீலன் ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

32


சித்து - சித்தி, மரிவுறு காலை - இறக்கும்போது, மறலி - யமன், துரிசு - குற்றம்.

வஞ்சக நெஞ்சர் காணா
மாண்பினன்; நகையே என்றும்
கொஞ்சிடும் முகத்தான்; யார்க்கும்
குழந்தையைப் போலே நிற்பான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/27&oldid=1460015" இலிருந்து மீள்விக்கப்பட்டது