பக்கம்:அன்பு மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அன்பு மாலை

மலைவுறல் நீக்கல் வேண்டின்
மாண்புறும் அருணை தன்னில்
துலைதவிர் கின்ற ராம -
சுரத்குமார் பாதம் தாழ்மின்.

39

மலைவுறல் - மயங்குதல். துலை தவிர்நின்ற -ஒப்பில்லாத.

பண்ணுறு பாடல் கேட்டுப்
பலகாலும் சிரிப்பான்; தன்னை
அண்ணிய அன்பர்க் கெல்லாம்
அடைகின்ற கவலை தீர்ப்பான்:
மண்ணுறும் ஞானி யர்க்குள்
மாதவ ஞானி யாவான்;
துண்ணென உவக்கும் ராம
சுரத்குமார் திருத்தாள் போற்றி!

40


அண்ணிய -அடைந்த, மண் உறும் - உலகிலுள்ள, துண்ணென- விரைவில்.


இட்டமாய் நின்ற தெய்வம்
இவனெனப் பல்லோர் வந்தார்;
மட்டறா மகிழ்ச்சி கொள்ள
மாநெறி தன்னைக் காட்டி
நட்டமே தும்சா ராத
நன்னயம் காட்டு கின்றான்,
துட்டரைச் சீறும் ராம
சுரத்குமார் திருத்தாள் போற்றி!

41

மட்டு - அளவு.

மயர்வுறும் மகித லத்தில்
மாயையின் ஆடற் குள்ளே
பயில்வுறும் மாந்தர் எல்லாம்
அஞ்ஞானச் சிறையிற் பட்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/30&oldid=1303409" இலிருந்து மீள்விக்கப்பட்டது