பக்கம்:அன்பு மாலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

27


என்பெரும் தெய்வ மென்றே
இறைஞ்சிய பெரிய நாதன்
துன்பமில் லாத ராம
சுரத்குமார் திருத்தாள் போற்றி!

48


இறைஞ்சிய - வணங்கிய.


அடர்கின்ற பாவ மெல்லாம்
அருங்கதிர் முன்ப னிப்போல்
இடருற்றுப் போகும் அன்னோன்
இருவிழி தன்முன் னாலே;
திடர்பட்ட அஞ்ஞா னத்தைச்
சீர்பெறும் ஞானத் தாலே
தொடர்வுறா மற்செய் ராம
சுரத்குமார் பாதம் தாழ்மின்.

49


அடர்கின்ற- சேர்கின்ற , திடர்பட்ட -குவிந்து நின்ற.


இல்லையென் பார்கள் சில்லோர்;
இருப்பதென் பார்கள் பல்லோர்;
மல்லுறும் மாயை தன்னில்
மயங்கியே நிற்பார் பல்லோர்;
சொல்லிலே அடங்கா ஒன்றைத்
துய்ப்பதே வழியென் கின்றான்,
தொல்லைகள் தீர்க்கும் ராம
சுரத்குமார் திருத்தாள் சேர்மின்.

50


மல் உறும்- மோதுதல் செய்யும், துய்ப்பது - அநுபவிப்பது.


காலத்தால் இடத்தால் எல்லை
காணொணாப் பிரமந் தன்னச்
சீலத்தால் ஞானத் தாலே
தெளிவுறக் காண்மின் என்பான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/33&oldid=1303418" இலிருந்து மீள்விக்கப்பட்டது