பக்கம்:அன்பு மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்பு மாலை

நைவுறும் நெஞ்சத் தார்கள்
நாயகன்; அருணை மேவும்
துய்யவன் ஆகும் ராம
சுரத்குமார் பாதம் போற்றி.

57

செப்பம்-செம்மை,நிறைவு, குற்றம் இன்மை, துய்யவன்-சுத்தன்.


மதிநலம் பெற்றோர் எல்லாம்
வாழ்வினில் புகழைப் பெற்றார்;
நிதிநலம் பெற்றோர் எல்லாம்
நீள்சுகம் பெற்றா ரேனும்
கதியுறு காலன் வந்தால்
காப்பதற் காறும் உண்டோ
துதிபெறும் ஞானி ராம
சுரத்குமார் தன்னைச் சேர்மின்.

58


மதி - புத்தி, கதி - வேகம்.


கடல்எனும் பிறவி தன்னைக்
கடப்பதற் காறு காணார்,
மிடல்பெரி தடைந்தோம் என்பார்;
வேதாந்தம் படித்தோம் என்பார்:
அடல்மிக உடையோம் என்பார்:
அறிஞம்யாம் என்பார்: என்னாம்
சுடர்வுறு கின்ற ராம
சுரத்குமார் தன்னைச் சார்மின்.

59

மிடல்- வலிமை.

ஏலாத செய்கை யெல்லாம்
எண்ணியே செய்வார் பல்லோர்;
மாலாகி நெஞ்சம் மாழ்கி
மதியினை இழந்து நிற்பார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/36&oldid=1303421" இலிருந்து மீள்விக்கப்பட்டது