பக்கம்:அன்பு மாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

31


நூலாய்வார், தம்மை ஓரார்:
நுவல் கடற் பிறவி சார்வார்;
தோலாத நாவான் ராம
சுரத்குமார் தன்னை அண்மின்.

60


மாலாகி - மயங்கி, மாழ்கி - வருந்தி, தோலாத நாவான்-சொன்ன சொல்லில் சோர்வு இல்லாத நாவையுடையான்.


யார்வந்தார், யார்போ னார்கள்
என்றுநாம் கணக்குப் பார்க்கின்
நேர்வந்தார் யார்இ ருந்தார்?
நிலையில்லா தெல்லாம் போனார்;
கார்வந்து மலியும் சோலை
அருணையில் கதித்த செல்வன்,
சோர்வொன்றில் லாத ராம.
சுரத்குமார் தன்னைச் சார்மின்.

61


கார் - மேகம், கதித்த சிறப்புற்ற.

ஏற்றினில் வருவான்; கையில்
இணைப்புறு சங்கு கொள்வான்;
கூற்றினை உதைப்பான்: தீமை
குறையவே நடிப்பான்; இன்னோர்
வேற்றுருக் கொண்டு ஞானம்
விளங்கிய அருணை தன்னில்
தோற்றிடும் அவனே ராம
சுரத்குமார் என்னக் கொண்மின்.

62


ஏற்றினில் - ரிஷப வாகனத்தில், இன்னோர் - இத்தகையோர்.


சால்பினைக் காணார், ஈசன்
தரும்அருள் பேணார், என்றும்
மாலினைக் கொண்டு வீணே
மயக்கத்தில் தோய்ந்தே நிற்பார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/37&oldid=1303422" இலிருந்து மீள்விக்கப்பட்டது