பக்கம்:அன்பு மாலை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 37

வாதம் இடுவார், படிப்பறி வார், பல மாண்பறிவார், இதம் அறிவார், கிளர்கின்ற கானம் கெழுமவரும் வேதம் அறிவார் எனினுமக் காலனை வெல்லுவரோ? நாதனம் ராம சுரத்குமார் பால்வம் மின் நன்மையுண்டே. & 4 கானம் கெழும - சுவரம் பொருந்த,

அகண்ட முறுசச்சி தானந்தம் அவ்யயம் ஆன்மச்சுடர் திகந்தம் பரவிச் செறிபொருள் என்றே தினமுரைப்பீர் சுகந்தரு மோ? செய்கை துன்னிட

வேண்டும்; துணிந்துசென்றே இகந்தனில் ராம சுரத்குமார்

தன்பால் இணையுமினே! - & 5

அகண்டம் - பிளவில்லாத தன்மை. திகந்தம் - திசைகளின் முடிவு வரையில். .

காலம் கடந்த தனிப்பொருள், எல்லாக் கதிகளையும்

ஞாலம் தனையும் கடந்த பெரும்பொருள், ஞானமென்னும்

கோலம் கொளும்பொருள், ராம சுரத்குமார் கோலமொடு

சீலம் பல கொண்டு நிற்பதைக் கண்டுநீர் சேருமினே 86

கதி - மார்க்கம்.

ஐய மறுமின், அடர்புலன்

ஐந்தின் அவலமெல்லாம் நைய அருளைப் பெறுமின் என்

றேசொல்வி நாளுமன்பர் செய்யும் வணக்கத்தைக் கொண்டுளான்

ஞானமெய்ச் சித்தர்புகழ் மெய்யளும் ராம சுரத்குமார் . . .

என்கின்ற மெய்ம்முனியே & 7

அவலம் - துன்பம், நைய அழிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/43&oldid=535564" இருந்து மீள்விக்கப்பட்டது