பக்கம்:அன்பு மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அன்பு மாலை



பாகை அணிந்தான், நறும்பாகு
போற்சொல் பரிந்துரைப்பான்,
ஈகை உடையான், வருவார்க்குப்
பாலை இரந்தளிப்பான்,
சோக மிலாத பெருநிலம்
காட்டிடும் தூயனிவன்
ஏகன் தனையறி ராம
சுரத்குமார் என்பவனே.

88

பாகை - தலைப்பாகை. நறும்பாகு - நறுமணம் வீசும் வெல்லப் பாகு,

கானத்தைக் கேட்டுக் குதுகலிப்
பான்;நற் கவிகள்சொலின்
பானத்தைப் போலப் பருகுவான்:
வேதப் பனுவல்சொலும்
ஞானத்தைச் சொல்லால் நவின்றிடு
வான். சுத்த ஞானியிவன்
தேனுற்ற சொல்லினன், ராம
சுரத்குமார் தேவனன்றே.

89

கானம் - இசைப்பாட்டு,

கல்லும் கரைக்கும் மொழியினன், மாந்தரைக் காசினியில்
வல்ல புலனைந்தைத் தம்நெறி போகவே வைத்திடுவான்
நல்லவர் போற்றிய நல்லவன், யாவர்க்கும் நற்குழந்தை

சொல்லரும் இன்புகழ் ராம சுரத்குமார் தூமுனியே.
90

தம் நெறி - தமக்குரிய நல்ல வழியில்.

சேய்போல் சிரிப்பான், சிகரெட்டை
ஊதுவான். சேவடிக்கண்
யார்வந்து நிற்பினும் பொன்போலப்
பேசி இதந்தருவான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/44&oldid=1303381" இலிருந்து மீள்விக்கப்பட்டது