பக்கம்:அன்பு மாலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்பு மாலை

தலங்களுக்குள் பெருந்தலமாம் திருவருணை மேவிச்
சாந்தநிலை இன்னதெனச் சாற்றுகின்ற மெய்யன்,
குலங்களுக்கு மேலான குலத்திலுறை அப்பன்,
கோதற்ற ராமசுரத் குமாரென்னும் ஞானி.

94

வலம் - வெற்றி,

ஞானப்பால் தருவதனால் தாயாகி நிற்பான்;
நற்சொர்க்க பூமி தரும் தந்தையென வருவான்;
ஈனப்பாங் கில்லாமல் பிறவிநோய் தீர்க்கும்
இவன்பெரிய மருத்துவனாம் என்றேநாம் காண்போம்;
தானத்தால் யோகத்தால் பத்தியினால் காணும்
தனிச்சுடரும் இவன்எனவே அன்பர்கள் நினைப்பார்;
ஈனப்பார் தனில்இனிமேல் பிறவாத வண்ணம்
இன்னருளைத் தருகின்ற ராமசுரத் குமாரே.

95

ஈனப்பார் - இழிவையுடைய பூமி.

குரங்கென்னும் மனமடங்கும் வழியினைக்கா ணாதே
குலைகின்ற நெஞ்சகத்தீர், இங்கேநீர் வம்மின்,
தரங்கமுறு மாறடங்கிச் சார்கின்றாற் போலே
தழைகவலை யாவையுமே மிகஅடங்க நிற்பீர்;
கரங்களால் குவித்தென்றும் கால்களையே வணங்கிக்
காதலால் நிரப்புகின்ற ராமசுரத் குமார்சொல்
வலங்கொள்ளும் வார்த்தையிலே ஞானத்தைக் காண்பீர்,
மண்ணிலே விண்ணகத்தைக் கண்டுபெற லாமே.

96

தரங்கமுறும் ஆறு - அலையையுடைய நதி.

மண்ணென்றும் பொன்னென்றும் மங்கையர்கள் என்றும்
மாயாத மூவாசை மாய்த்திடவே வேண்டின்
கண்ணொன்றும் மணிபோலக் கடலமுதம் போலக்
கருதும்உடற் காவிபோல் நிற்கின்ற ஐயன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/46&oldid=1303488" இலிருந்து மீள்விக்கப்பட்டது