பக்கம்:அன்பு மாலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

41

மண்ணின்ற பெரும்புகழோன், அருணையினில் மேவி
வருவார்கட் கருள்சுரக்கும் நற்காம தேனு,
திண்ணென்ற பெருஞானி, ராமசுரத் குமாராம்
செல்வனையே அடைமின்கள்; பேரின்பம் காண்பீர்.

97

கண் ஒன்றும் மணி - கண்மணி. திண்ணென்ற உறுதியையுடைய.

சிவனென்றும் மாலென்றும் முருகனென்றும் பேசிச்
சித்தாந்தப் படுத்தியங்கே சண்டைமிக மூட்டி அவனென்று
அவனென்றும் மிவனென்றும் பெரியனென்றும் சிறியன்
அவனென்றும் சொலிச்சொல்லி வீணேநாள் போக்கி
நவம்ஒன்றும் மெய்ஞ்ஞான நிலையையறி யாது
நானிலத்தில் பிறந்திறந்து வரும்நோயைப் போக்கத்
தவம்ஒன்றும் பெருஞானி ராமசுரத் குமாரைத்
தழையருணா சலத்தினிலே கண்டுபணி வீரே.

98

நவம் - புதுமை. ஒன்றும் -பொருந்திய,

யோகத்தில் மூச்சடக்கி இருந்தாலும் அங்கே
யுத்தத்தைச் செய்கின்ற மாயையுண்டு கண்டீர்;
சாகத்தான் வாழ்வெடுத்த பேர்களையே போலச்
சதாஆசைப் பட்டுழன்று வீணேநீர் மாள்வீர்;
போகத்தால் ஒன்றுண்டோ? ஞானத்தால் உண்டாம்:
பொதுவழியைக் காட்டுகின்ற அண்ணலாம் ஒருவன்
ஏகத்தான், பெயர்ராம சுரத்குமார் என்பான்,
இங்கே நீர் வந்திடுவீர், யாவையுமே காண்பீர்.

99

ஏகத்தான் - ஒன்றையே அறிந்தவன்.

சித்தாந்தம் பேசிடலாம்; வேதாந்தம் பேசிச்
சிறப்புற்றே சேர்ந்திடலாம்: காசினியில் பொருளை
ஏதாந்தம் குறையெல்லாம் போக்குதற்கே ஈட்டி
இவன்போலச் செல்வனுண்டோ எனவே நின்றிடலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/47&oldid=1303491" இலிருந்து மீள்விக்கப்பட்டது