பக்கம்:அன்பு மாலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42

அன்பு மாலை


சூதாம்பொய் வாழ்க்கையிலே கடைசியிலே வந்து
தொல்லைதரும் காலனவன் வருங்காலை நீங்கள்
ஏதாங்கண் செய்வீர்கள்? அதைஓர்மின்; இங்கே
எய்திடுவீர் முனிராம சுரத்குமார் மாட்டே.

100

காசினியில் - உலகத்தில். தம் குறை ஏதோ அதையெல்லாம். ஏது ஆங்கண் செய்திடுவீர்கள் - அப்போது என்ன செய்வீர்கள்.ஓர் மின் - எண்ணுங்கள்.

மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞன்போல் ஆவி
விழுங்காலை வலைபோடக் காலன்வரு வான்காண்;
நான்பிடித்தே அகங்காரம் கொள்ளுபவர் எல்லாம்
நாசமாய்ப் பொய்வாழ்வை வீணாக்கு வாரே;
தேன்பிடித்த திருச்சொல்லான் ஞானமுனி அருணைத்
திருநகரில் வாழ்கின்ற ராமசுரத் குமாராம்
கோன்பிடித்த நெறியினிலே சென்றவன்பால் கூடிக்
குளிரடியே தஞ்சமென வீழ்வீர்கள் நன்றே.

101

நான் பிடித்தே - நான் என்னும் சொல்லைப் பற்றி.

திண்ணமென எதனைநாம் சொல்லுகின்றோம்? இங்கே
சேர்கின்ற யாவையுமே பொய்யாகிப் போகும்:
எண்ணமெலாம் பொய்யாரும்:பேச்செல்லாம் பொய்யாம்
இயற்றுகின்ற செயலெல்லாம் பொய்யாகும் என்றே
நண்ணறிவில் கூர்ந்தறிந்து பார்த்தனிரேல் நீங்கள்
நாளும்நல் ஞானத்தைப் பெறுவதற்கு முயல்வீர்.
அண்ணலவன் திருவருணை நகர்தன்னில் இருப்பான்,
அருள்ராம சுரத்குமார் தன்பாதம் சேர்மின்.

102

கூர்த்து அறிந்து- நுணுகி அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/48&oldid=1303497" இலிருந்து மீள்விக்கப்பட்டது