பக்கம்:அன்பு மாலை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 事荔

பூமிபெரும் காடதனில் உணர்ச்சியிலா மாந்தர்

பொலிகின்ற விலங்கினங்கள், மாயையெனும் அதனுள் நாமிருப்போம்: இதனிடையே நல்லருளைக் கூட

நயந்திடுவீர், இங்கருணை நகரினிலே உள்ளான்; சாமியெனக் கும்பிடலாம்; குழந்தையெனக் களித்தே

தயைதன்னைப்பெற்றிடலாம்; அவன்தான்யார் என்ருல் நாமமது ராமசுரத் குமாரன் என வந்தான். - நலியாமல் காப்பாற்றும் நளினபதத். தானே. 103

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாம்: காளுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணும்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாம்: நாதாந்த மேல்நிலைமேல் ஞானவடி வோனம்; வல்லார்க்கும் வல்லவளும் மாயோகி அருணே

வாழ்கின்ற பெருமானும் பேரண்ணல், சாந்தம் புல்லார்க்குத் தெரிவரியான், ராமசுரத் குமாராம்

புங்கவன வந்தடைமின், சங்கடங்கள் போமே.104

புங்கவன் - தேவன்.

ఉLఒrGL றேமாந்து பொருள்தன்னைத் தேடிக்

காசினியில் காசுக்கே நாள்தன்னை அழிப்பார்: அடல் உள்ள உடலென்றே இன்பத்தைத் தேடி

அரிவையர்பால்மோகங்கொண்டழிவார்கள் பல்லோ சுடர்கின்ற நன்ஞானம் வேண்டுமென்றே தேடிச் சுயமுயற்சி செய்வார்கள் மிகஅரியர் தாமே: அடர்கின்ற மாஞானி ராமசுரத் குமாரை

அடைமின்கள். நன்னெறியில் செல்லும்வழி யாமே..

- 。置妙慕 அடர்கின்ற செறிகின்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/49&oldid=535570" இருந்து மீள்விக்கப்பட்டது