பக்கம்:அன்பு மாலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அன்பு மாலை

அகங்காரப் புலிவந்தே சாந்தமெனும் மானை
அடுகின்ற நிலையறியீர்; ஆதலால் இங்கே
சுகங்காண வேணுமெனில் அகங்காரம் போக்கித்
தூயமனம் அடைதற்கே சொல்லுகின்றேன் வழியை;
மகங்காணும் பலனெல்லாம் வந்ததென இங்கே
மலர்முகத்தோ டின்சிரிப்பைக் காட்டுகின்ற செல்வன்
நகங்காணும் அருணையினில் ராமசுரத் குமார்தன்
நளினவடி சேர்மின்கள்; நல்லவழி உண்டாம்

106

மகம் - யாகம். நகம்-மலே,நளின அடி தாமரையைப் போன்ற திருவடிகளே.

குறைகாணாத் தாய்போலக் குளிர்ச்சிதரும் தேயன்,
கொடுமனத்தின் துரிசெல்லாம் அழிக்கின்ற தூயன்,
மறைஉறையும் பொருளெல்லாம் மலர்கின்ற வாயன்,
வானவர்தம் பதமெல்லாம் அளிக்கின்ற நாயன்,
நறைநிறைந்த மொழிபுகலும் நல்லபெரும் சேயன்
நாள்நாளும் அன்பர்கள் போற்றிசெயும் நேயன்
துறைபடிந்த கலைகளெல்லாம் வளர்க்கின்ற ஆயன்
கோதில்லா ராமசுரத் குமாரென்னும் முனியே.

107

தேயன் - தேசுடையவன், நாயன் - தலைவன், நறை - தேனின் சுவை, சேயன் - குழந்தை போன்றவன், ஆயன் - தலைவன்.

காட்டினிலே மலைகளிலே கடற்கரையில் சென்று
கருத்தழியத் தியானத்தில் இருக்கின்ற நிலையை
ஓட்டிடுவீர்; அதுமிகவும் அரியதுவாம் கண்டீர்;
உள்ளமதில் நெகிழ்ந்தன்பு செய்கின்றீர் ஆயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/50&oldid=1303507" இலிருந்து மீள்விக்கப்பட்டது