பக்கம்:அன்பு மாலை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை - ... 45

நாட்டமெல்லாம் ஒருநாட்ட மாகவந்து நின்ருல்,

ஞானமிது என்பதனை நன்கு தெளி வீர்கள்; - - கூட்டுமருள் வழங்கு பிரான், திருவருணே மேவும்

கொள்கையினன், ராம சுரத் குமாரென்னும் தவனே.

- I 0.8

சொல்லாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்

துன்னுகின்ற நெறிசேர்ந்து செயல்கள் செய் யாமல் வித்தமெலாம் வீணுக்கி நாளையுமே போக்கி

விரகறியா துழல்கின்ற மாந்தர்காள், கேண்மின்: சித்தமெலாம் ஒரு மிக்கச் செயல் இழந்து நிற்கச்

சீவன் இந்த உடம்பினிலே நிற்கின்ற போதே அத்தனைக் கண் டுறுகின்ற ராமசுரத் குமாரை .

அடைமின்கள் இடரெல்லாம் அடியோடே போமே.

I 09: வித்தம் - செல்வம். விரகு - உபாயம்.

பணம் வேண்டு மென்பவரும் பலம்வேண்டு மென்று பயில்கின்ற மாந்தர்களும் கவலைகள் கொண்டு குணம்மறந்த மாந்தர்களும் வந்திங்கே கூடிக்

குலவுகின்ற கவலையெல்லாம் போக்கிடுகின் ருரே; நிணம்வேண்டும் உடல்வாழ்க்கை பெற்றதனுல் இங்கே நித்த நித்தம் கண்டதென்ன? துயரொன்று தானே? எணம்வேண்டும் சாந்தத்தை எய்துதற்கு வேண்டின்

எழில்ராம சுரத்குமார் தம்பாலே வம்மின், 1 10

நினம் ஊன், எணம் - எண்ணம்.

கல்வியினல் பயனுண்டோ? செல்வத்தால் காணும்.

கவின்பயன்தான் வேறுண்டோ? யாவும்.இவ் வாழ்வில்

நல்வித்த மாகும்.ஆம் நன்றெனினும் ஞானம்

நல்கிடுநல் வழிதனையே சேர்ந்திடுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/51&oldid=535572" இருந்து மீள்விக்கப்பட்டது