பக்கம்:அன்பு மாலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அன்பு மாலை

சாந்தமலை யாய்நின்ற தவமுனிவன், ஞானத்
தனிக்கடலாம், அன்பர்தம் மனஇரும்பை ஈர்க்கும்
காந்தமென நிற்கின்ற பெரும்புகழோன், யாரும்
களிப்படையச் சிரிக்கின்ற குழந்தைபோல் இருப்பான்,
நீந்தரிய பிறவியினை நீந்தவழி செய்வான்,
நிலையான சீர்வாழி! அவனுடைய இடத்தே
ஏந்துமன்பிற் செல்லுகின்ற அன்பர்கள் வாழி!
இரும்புவியும் வாழி! என்றும் அருள்மிகவா ழியரோ!

117
(4-5-1979)


(16-8-1979 அன்று பாடியவை)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வேத நாயகன் விமலர்தம் நாயகன்
விளங்கொளி படைத்திருக்கும்
பூத நாயகன் பூமகள் நாயகன்
புலவர்கள் தாமெல்லாம்
ஓதும் நாயகன் அருணையில் மேவிய
உத்தமன் கழல்போற்றி
நாத னாகிய ராம்சுரத் குமார்தனை
நண்ணுவார் வினையிலரே.

118

பூதநாயகன் - உயிர்களின் தலைவன், பூமகள் நாயகன் - திருமால்.


வாம மாகிய ஞானங்கள் வந்துறும்;
மதியெலாம் தெளிவாகும்;
சேம மாகிய சாந்தியே உள்ளத்தில்
திகழுமால் என்றென்றும்;
காம மாதிய பகைகளை நீக்கியே
கருணையாம் எல்லைக்குள்
சேம மாகிய ராம்சுரத் குமாரிடம்
செவ்வியிற் சேர்மின்கள்.

119


வாமம் - நன்மை, செவ்வியில் - நல்ல சமயத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/54&oldid=1304284" இலிருந்து மீள்விக்கப்பட்டது