பக்கம்:அன்பு மாலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அன்பு மாலை

குழந்தைபோல் சிரிக்கின்றான்; வருவார்கள் தமக்குக்
கூறுகின்ற உரையினிலே சாந்தியினை அளிப்பான்;
தொழுந்தோறும் ஞானியாய்க் கடவுளாய் நிற்பான்;
துக்கமெலாம் போவதற்கோர் வழியினையும் சொல்வான்; விழுந்தடைந்தார் தமைக்காக்க மிகஅருளைச் செய்வான்;
மேலான பொருளெல்லாம் இவன்மொழியில் காண்போம்;
தழுதழுக்கக் கண்ணீரை விடுகின்றார் பாலே (போம்;
தாயாகி ராமசுரத் குமார்யோகி நிற்பான்.

128


வருவார்க்குப் பாலளித்தீங் கன்னையே போல்வான்;
வானமெனும் நிலத்துக்கு மேலான பூமி
தருவான்போல் தந்தையென நிற்கின்ற பெம்மான்;
சார்கின்ற ஐயமெலாம் தெளிவிக்கும் குரவன்;
மருவாரும் கூந்தலர்தம் காமத்தைப் போக்கி
மாட்சிபெறு ஞானமெனும் நல்லருளை ஈவான்;
தெருவாரும் விளையாடல் மிகமிகவே புரிவான்;
சித்தனிவன் ராமசுரத் குமார்யோகி அம்மா!

129

மேலான பூமி - முத்தி, மரு- வாசனை.


மனத்தைமிக அடக்குகின்ற சித்துப்போல் உண்டோ?
மாயையினால் மனமலையும் நிலையெல்லாம் காப்போம்;
வனத்தகத்தே சென்றாலும் நெஞ்சடங்கல் இல்லை;
மாஞானி முனர்நின்றால் சாந்திபெறு கின்றோம்;
இனத்தகத்தே ஆசைவைத்தே எப்போதும் இங்கே
இருஞ்செல்வம் ஈட்டிடுவோம் என்றிருப்பார் காணார்;
புனத்தகத்தே தினைமேவும் வள்ளியணை நாதன்
பொற்பெனவே ராமசுரத் குமார்தானே நிற்பான்.

130

இனத்தகத்தே-உறவினர்களிடத்தில், புனம் - தினைக்கொல்லை.

பொல்லாங்கெல் லாம்போக மனமடங்கி நிற்கப்
பொற்புறுநற் சிதானந்த வாழ்வினிலே ஆரும்
நல்லார்கள் யாவர்அவர் இங்கேவந் துறுவார்;
நாட்டத்தில் சிவஞான யோகியிவன் என்பார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/58&oldid=1303454" இலிருந்து மீள்விக்கப்பட்டது