பக்கம்:அன்பு மாலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

53

அல்லாத பேர்க்கெல்லாம் இவன்பித்த னாவான்;
அவன் சொல்லை யார்கேட்பார் என்றுரைத்தே திரிவார்;
கல்லார்கள் ஆனாலும் காதலுடன் வந்தால்
கருணைபெற லாம்ராம சுரத்குமார் மாட்டே.

131

பொல்லாங்கு - தீமை, ஆரும் - இருக்கும்.


ஓங்காரப் பொருளாகி வேதமெனும் உறையுள்
உறைகின்ற மேம்பொருளாய் இருக்கின்ற பிரமம்
யாங்காணும் வகையின்றால்; அதன்தன்மை யாவர்
இங்கெடுத்தே இசைப்பார்கள்? எல்லாம்பொய் என்றே
தாங்கெடுத லோடுபிறர் தம்மையுமே கெடுக்கும்
தன்மையுளார் மலிந்தஇந்த உலகத்தில் அம்மா
யாம் கண்டேம் நீகாணக் காட்டுவேம் என்னும்
இயல்புள்ளான் ராமசுரத் குமாராகும் யோகி.

132


கல்லாத கல்வியெல்லாம் கற்றார்கள் மாட்டுக்
கதிர்விடுநல் உள்ளத்தே சோதியென நிற்பான்;
நல்லார்க்கு நல்லவனாய் நம்பினவர் தமக்கே
நாட்டத்தில் மிக நன்மை காட்டுகின்றான் இவனே;
பொல்லாதார் ஆனாலும் இவன்முன்னே போந்தால்
புக்கடங்கிச் சாந்தியொடும் நிற்கின்றார் அம்மா!
எல்லாமாய் அல்லதுமாய் இருக்கின்ற பொருளை
இவன்காட்டு கின்றான்ராம் சுரத்குமார் ஞானி.

138


பலபேசிப் பலசொல்லிப் பலகாலும் திரிந்து
பலர்பாலே ஐயங்கள் கேட்டிருந் தாலும்
சிலசொல்லக் கற்கின்ற பெரியார்தம் மாட்டே
திகழும்ஒரு சொல்ஐயம் போக்குகின்ற தென்பார்;
அலகில்லா ஐயங்கள் இருந்தாலும் அவன்பால்
அரைக்கணத்தி லமர்ந்திருந்தால் நாமேதான்தெளி நிலைபெரியான் திருவருணை மாநகரில்மேவும்(வோம்;
நீதனவன் ராமசுரத் குமாராகும் யோகி.

134
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/59&oldid=1303461" இலிருந்து மீள்விக்கப்பட்டது