பக்கம்:அன்பு மாலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அன்பு மாலை

எண்ணத் தொலையாக் கவலையெலாம்
எய்தி மயங்கி இவ்வுலகில்
நண்ணற் கரிய இடையூற்றில்
நலியும் அன்பீர், இவண்வம்மின்;
பெண்ணிற் கரிய இடம்கொடுத்த
பெம்மான் அருணைத் திருநகரில்
வண்ணப் பணிக்கும் ராமசுரத்
குமரன் தாளை வணங்குமினே.

160

வண்ணப் பணிக்கும் - இனிமையுற அருளும்.

மோனத் திருக்கும் திருவுளத்தான்;
முத்தர் போற்றும் பெரும்புகழான்;
ஞானத் தெளிவை மிகப்பெற்றான்;
நான்என் பதனை அறவொழித்தான்;
ஈனத் திறமே இல்லாதான்;
இலகும் அருணை மாநகரில்
சானத் திருப்பான், ராமசுரத்
குமாராம் தவனை மேவுமினே.

161

சானத்து - தியானத்தில், தவன் - தவமுனிவன்.

சொல்ல வொண்ணாப் பெரும்புகழான்;
துன்ன வொண்ணா மகிமையினான்;
வெல்ல வொண்ணாப் பொறிகள்எலாம்
வென்ற தீரன்; அருணையினில்
நல்லர் வணங்க இருக்கின்றான்;
நாமம் ராம சுரத்குமார்;
அல்லல் களைய அவன்முன்னே
அடைமின்; என்றும் இன்பம்வரும்.

162
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/68&oldid=1303510" இலிருந்து மீள்விக்கப்பட்டது