பக்கம்:அன்பு மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்றுரை


(1-12-1978 ஸ்ரீ ஸ்வாமிகளின் ஜயந்தி விழாவில் தலைமை தாங்கி ஜயந்தி மலரை வெளியிடும்போது ஆற்றிய உரை.)

வெளியிலிருந்து விழாக் கொண்டாடுவதை விடவும்,
 பெரிய கூடங்களிலிருந்து விழாக் கொண்டாடுவதை விடவும், ஓர் அறையில் இருந்து, ஆண்டவனுடைய அருட்சின்னமான பெரியவர்களின் அருளைப் பெறுவதற்குரிய இந்த மணிவிழாவைக் கொண்டாடுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஊரெல்லாம் கூடி ஒலிக்க நின்றாலும் நமக்கு உள்ளே பாயாது. யார் யார் பாக்கியம் பண்ணினவர்களோ அவர்கள் வந்திருக்கிறார்கள். மணிகளைப் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். ஆண்மணிகள்,பெண்மணிகள் இரண்டு மணிகளும் கொண்ட மணிவிழா இது.

இந்த விழாவில் ஒரு சிறிய கைங்கரியத்தைச் சுவாமிகள் எளியேனுக்குப் பணித்தார்கள். அவர்களைக் காணும் போதெல்லாம் சில செய்யுட்களை நான் பாடுவது வழக்கம். அவற்றையெல்லாம் பதிவுசெய்து எனக்குப் படியெடுத்துக் கொடுத்தார்கள் அன்பர்கள். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.போன ஆண்டு பேசிய பேச்சை ஒலிப்பதிவு செய்து படியெடுத்துத் தந்தார்கள்.அவற்றை வெளியிடும்பொழுது சுவாமிகளைப் பற்றிய வரலாறு சுருக்கமாக இருந்தால் நல்லது என எண்ணினேன்.ஆகவே என்னுடைய மனத்திற்குத் தோன்றிய கோணல் முறையிலே ஒரு முகவுரையையும் சுவாமிகளின் வரலாற்றையும் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/7&oldid=1303726" இலிருந்து மீள்விக்கப்பட்டது