பக்கம்:அன்பு மாலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



72

அன்பு மாலை

தாய்போல் பாலை அருத்திடுவான்;
தந்தை போல இனியசொல்வான்;
வாயில் சிலகால் சிகரெட்டை
வைத்துக் குடிப்பான்: அன்பர்பால்
நோயில் லாத நலம்தருவான்;
நுட்பம் எல்லாம் இசைக்கின்றான்;
மேய ராம சுரத்குமார்,
மேலா மவனைப் பணியுமினே. 195

அருத்திடுவான் - அருந்தச் செய்வான்.

சேய்போல் சிரித்தே நலம்செய்வான்;
சீரார் வீட்டை இனிதடைய
ஆயா நிற்கும் வழிசொல்வான்;
அனைத்தும் உணர்ந்த மெய்யனிவன்;
நோயே வந்தால் மருந்துரைப்பான்;
நுட்ப மெல்லாம் தானுரைப்பான்;
காயே கனியச் செய்கின்ற
கவினார் ராம சுரத்குமார். 196

வீட்டை - முத்தியை.

என்றும் அவியா விளக்கத்தை
இதயத் திருத்த வழிசொல்வான்;
பொன்றும் துணையும் புகழமையப்
புதிய நெறியைத் தான்புகல்வான்;
நன்றெண் ணுதற்கு வழிசொல்வான்:
நரரைத் தேவாய் ஆக்குகின்றான்:
ஒன்றும் ராம சுரத்குமார் .
ஒருமா யோகி அருணையிலே. 197

பொன்றும் துணையும் - இறக்கும் வரையும்.
நரரை - மனிதர்களை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/78&oldid=1303384" இலிருந்து மீள்விக்கப்பட்டது